மரணத்தை ஏற்க முடியவில்லை; ஏதாவது செய்ய நினைத்தேன்; இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
புதுடில்லி: தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டபோதிலும் பல உயிர்களை காப்பாற்ற போராடியதை, ஸ்கை நியூஸ் அரேபியாவுக்கு அளித்த பேட்டியில் பிளைதுபாய் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் நினைவு கூர்ந்தார்.
அவர் கூறியதாவது: நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்தேன். என் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானும், பயணிகளுக்கு உயிர் பிழைத்தது ஒரு அதிசயம். விமானம் சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தபோது, துணை விமானியான ஹமாம் அல்-ஹம்மாமி பிரார்த்தனை செய்ய விரும்பினார்.
மரியாதை நிமித்தமாக அவர் பிரார்த்தனை செய்யும் போது திரும்பி பார்க்கவில்லை; அவரை நான் கவனிக்காமல், என் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். என் தலையில் பலமாக அடிபட்டது. பிறகு எனக்கு சுயநினைவு வந்து, வந்து சென்றது. ஒரு கட்டத்தில், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று அஞ்சினேன்.
கதவை திறந்த போது, காட்சி முற்றிலும் வேறுபட்டிருந்தது. நான் குப்புற விழுந்து கிடந்தாலும் அங்கே நிலவிய பீதியும், அலறல் சத்தமும் எனக்கு நினைவிருக்கிறது. மற்றொரு விஷயம் என்னவென்றால், எனது சக ஊழியர் விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அதை நான் சாகும் வரை நினைவில் வைத்திருப்பேன். அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் சக ஊழியர் செய்த செயல் தான் நிலைமையை சரி செய்தது. இவ்வாறு ஸ்மிட் மச்சார் கூறினார்.
மேலும்
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
-
நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு
-
முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
-
சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி
-
சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கனமழை