கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வடசென்னி

மலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழாறு நடந்தது. முதல்வர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

தற்போது புது ஆட்சி அமைந்துள்ளது. புது முதல்வர், புது அமைச்சரவை, இளைஞர்களுக்காக என, முதல்வர் விஜய், என்னிடம் கூறினார். 60 ஆண்டு

களில், மாணவர்கள் படித்தாலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இனி, கல்வியுடன் வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜப்பான், ஜெர்மன் மொழி கற்கும் மாணவர்களுக்கு, 5 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, பத்திரிகை நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். எப்போதும் இரு மொழி கொள்கை தான். மும்மொழி கொள்கையை இந்த அரசு, ஒருபோதும் ஏற்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கீதா, உளவுத்துறை எஸ்.பி., மயில்

வாகனன், ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, தலைவாசல் தாசில்தார் காத்தமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement