சேதுக்கரைக்கு சரக்கு லாரிகளில் பயணம் செய்யும் கிராம மக்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,ல் சேதுக்கரை உள்ளது. ராமாயண புராண இதிகாசங்களுடன் தொடர்புடைய சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில் சரக்கு வாகனம், லாரி மற்றும் மினி லாரிகளில் திறந்தவெளியில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வது தொடரவே செய்கிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது :
புண்ணிய ஸ்தலங்கள் ஒன்றான சேதுக்கரைக்கு புனித நீராடுவதற்காக முன்னோர்கள் மற்றும் இறந்தவர்களின் நினைவாக காரியங்களை செய்வதற்கு நாள் தோறும் ஏராளமானோர் சேதுக்கரைக்கு வருகின்றனர். திறந்த வெளியில் ஆபத்தான முறையில் லாரிகளின் மேல் நின்று கொண்டு வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
போலீசாரின் செக் போஸ்ட்டை கடந்து இது போன்ற அத்துமீறிய பயணம் தொடர்ந்து நடக்கவே செய்கிறது. சேதுக்கரையில் கலப்பட டீ துாள் மற்றும் தரமற்ற உணவுப் பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி பாதுகாப்பான உணவுப் பொருள்களை விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
-
நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு
-
முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
-
சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி
-
சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கனமழை