‘ட்ரோன்’களை வீழ்த்த நவீன துப்பாக்கிகள் வாங்குகிறது போலீஸ்
சென்னை: ஒரே நேரத்தில், 10 ‘ட்ரோன்’களை, 10 வினாடிகளில் சுட்டு வீழ்த்தி செயலிழக்க செய்யும், ஆறு நவீன துப்பாக்கிகளை, தமிழக காவல் துறை கொள்முதல் செய்கிறது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு, 1.86 கோடி ரூபாயில், ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது; பின், இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, 1.56 கோடி ரூபாயில், ஆறு துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய, ‘டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது.
இந்த துப்பாக்கிகள், தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் இயக்கக்கூடியவை. ஒரே நேரத்தில், 10 ட்ரோன்களை, 10 வினாடிகளில் சுட்டு வீழ்த்தும் திறன் உடையவை. இந்த துப்பாக்கிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சிகளின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படும்.
துப்பாக்கிகள் எப்படி இருக்க வேண்டும்; அதில் என்னென்ன நவீன வசதிகள் இருக்க வேண்டும் என, 46 வகையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை