அமைச்சர் குறித்து அவதுாறு செய்தி யூ டியூபருக்கு தடை

சென்னை: அமைச்சர் பிரபுவுக்கு எதிராக அவதுாறு கருத்துகளை தெரிவிக்க, ‘யூ டியூபர்’ மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு, தனக்கு எதிராக சமூக வலைதளங்களில், ‘யூ டியூபர்’ மாரிதாஸ் ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், அமைச்சர் பிரபு குறித்து அவதுாறு கருத்துகளை வெளியிட, மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் குறித்து வெளியிட்ட பதிவுகள், வீடியோ காட்சிகளை நீக்க வேண்டும் என, ‘யூ டியூப்’ போன்ற சமூக வலைதளங்களுக்கும் உத்தரவிட்டார்.

Advertisement