பாறைகளை உடைத்து கடத்த முயன்ற 5 பேர் மீது வழக்கு

செந்துறை: செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தாசில்தார் டேனியல்பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திருநுாத்துபட்டியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்து கற்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. கற்களை ஏற்றிய மண் அள்ளும் இயந்திரம், லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆர்.ஐ., அளித்த புகாரின் பேரில் நத்தம் எஸ்.ஐ., மலைச்சாமி, கற்களை உடைத்து கடத்த முயன்ற நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த சங்கர் 60, சுப்பிரமணி 60, மல்லிகா 52, வாகன உரிமையாளர்கள் மல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த பூமிராஜா 51, வீரமணி 50, ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement