திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை: வாரி வழங்கியது லாட்டரி நிறுவனம்
புதுடில்லி: கொல்கட்டாவைச் சேர்ந்த, 'டைகர் அசோசியேட்ஸ்' என்ற லாட்டரி நிறுவனம், 2025 - 26ல், திமுக, அதிமுகவுக்கு, மொத்தம், 260 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான திமுகவும், அதிமுகவும், 2025 - 26ல், தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விபரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளன. இந்த நிதியாண்டில் மொத்தம், 191.19 கோடி ரூபாயை திமுக நன்கொடையாக பெற்றுள்ளது. இதில், 'டைகர் அசோசியேட்ஸ்' மட்டும், 125 கோடி ரூபாய் அளித்துள்ளது.
அதேபோல், மொத்தம், 161.36 கோடி ரூபாயை அதிமுக நன்கொடையாக பெற்றுள்ளது. இதில், 135 கோடி ரூபாயை, 'டைகர் அசோசியேட்ஸ்' வழங்கி உள்ளது. 2024 - 25ம் நிதியாண்டில், இரு கட்சிகளுக்கும் சேர்த்து, இந்நிறுவனம், 110 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், நடப்பாண்டில் தன் பங்களிப்பை இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தியுள்ளது. இரு நிதியாண்டுகளில் மட்டும், இந்த இரு கட்சிகளுக்கும் இந்நிறுவனம் மொத்தம், 370 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் கூட்டாளி சுப்பையன் நாகராஜன், தவெகவைச் சேர்ந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் மாமனாரும், பிரபல லாட்டரி தொழிலதிபருமான சாண்டியாகோ மார்ட்டினின் நீண்டகால கூட்டாளி ஆவார். மற்ற நிறுவனத்திலும் இருவரும் கூட்டாளிகளாக உள்ளனர்.
இது தவிர, 'புருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை, மதிப்பீட்டு நிதியாண்டில், திமுகவுக்கு மட்டும், 25 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. பெரும்பாலான நன்கொடைகள், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டுள்ளன.
கேட்டால் அம்பானி அதானி அப்படினு மடை மாற்றி கூறுவார்கள்
த்ராவிஷக் கொள்ளை
ஆக மொத்தம் இந்த இரண்டு பயல்களுமே திருட்டுப் பயலுகதான் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இரு கழகங்களுக்கும் நன்கொடை கொடுத்து முதல் போட்ட குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சியே நடக்கிறது. சாமர்த்தியம்தானே? .
பெரும்பாலான நன்கொடைகள், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டுள்ளன ?? 200 தொகுதிகளில் வெல்வோம்ன்னு துக்ளக்கார் காண்ஃபிடண்ட்டா சொன்னதை நம்பி தூக்கிக் கொடுத்துட்டாய்ங்க போல ....
எதற்க்காக கொடுத்தீர்கள் என்பதை சொல்லவும். நீங்கள் திருடுவதர்க்கு கொடுத்தீர்கள். மக்களுக்கு செய்ய கொடுத்தீர்களா? வெட்கம் மானம்
கருப்பு - வெள்ளை ஆகியது ?
கருப்பு - வெள்ளை ஆனதோ?
யார் வந்தாலும் நாங்கள்தான் ராஜா என்று சொல்லும் குடும்பம். வெளங்கும்
லாட்டரி பிசினஸ் இல்லாத தமிழக மாநில கட்சிகளுக்கு எதற்காக நன்கொடை கொடுக்கவேண்டும்?
நல்ல கேள்விதான் .... அவங்க லாட்டரி பிஸினஸ் மட்டுமே பண்றாங்கன்னு எப்படிச்சொல்ல முடியும் ?? செய்தியை நீங்க முழுசா படிக்கலையா ??
வாட்ஸ்ஆப்பில் லாட்டரிச்சீட்டு விற்பனை சூப்பரா நடக்குது.மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு