சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான மாநில பொது ஆய்வுப் பணிக் குழுமத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தமிழக சுகாதார சேவைகளை மேம்படுத்த, அக்.15, 16ல் தலா 20 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள், மருந்துகள் இருப்பு, அவசர சிகிச்சை, தாய்-சேய் நலப்பணிகள், மருத்துவர்களின் பணிகள், தேசிய சுகாதார இயக்கத் திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் நடந்த கூட்டத்தில், சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மருத்துவச் சேவைகளை விரைவாகவும் செம்மையாகவும் செயல்படுத்தவும் மாவட்ட சுகாதாரக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்களுக்கு அதிகாரிகள் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை அரசு செயலர் டாக்டர் தரேஷ் அகமது, தேசிய சுகாதார இயக்குனர் டாக்டர் அனீஸ் சேகர், கலெக்டர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.முருகன், நாங்குநேரி எம்.எல்.ஏ., நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு