சப்-கலெக்டர், தாசில்தாருடன் த.வெ.க., - எம்.எல்.ஏ., வாக்குவாதம்
துாத்துக்குடி: அனுமதியின்றி குளத்தில் மண் எடுத்த வாகனங்களை சப் - கலெக்டர் பறிமுதல் செய்த நிலையில், அவருடன் ஸ்ரீவைகுண்டம் த.வெ.க., -- எம்.எல்.ஏ., சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், குளங்களில் இருந்து விவசாய பணிகளுக்கு மண் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தில் உள்ள குளத்தில், நேற்று சிலர் அனுமதியின்றி, 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரம்பை மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்துார் சப் - கலெக்டர் கவுதம், ஏரல் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர், மண் அள்ளிய மூன்று பொக்லைன் இயந்திரங்கள், ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அப்போது, அதிகாரிக ளுக்கும், மண் அள்ளியவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., சரவணன், அவரது ஆதரவாளர்கள், சப் - கலெக்டர் கவுதம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளேன். இதுவரை குளத்தை துார்வார எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? விவசாயிகள், தங்கள் தேவைக்காக மண் எடுக்க ஏன் தடை விதிக்கிறீர்கள்?' என, சரவணன் கேள்வி எழுப்பினார்.
பருவமழை துவங்கி உள்ளதால், குளத்திற்கும், அதன் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மண் அள்ள நீர்வளத்துறை தடை விதித்துள்ளதாக, சப் - கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட சப் - கலெக்டர், தாசில்தார் வாகனங்களை, மக்கள் முற்றுகையிட்டனர். போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி, வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் பணத்தை தொட மாட்டேன், தொட விடவும் மாட்டேன், தொட்டவனை விட மாட்டேன் என்று ஒருவர் முழங்கினாரே அது வெறும் சினிமா வசனமா பாஸ்!?
இதுக்கெல்லாம் ஒரு அல்ல கையும் எழுத மாட்டானுங்க ஏன்னா 200 ரூபாய் கொடுக்க மாட்டாங்க
ஆக இப்போ என்ன சொல்றது வடிவேல் சினிமா டயலாக்மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு