தொழிற்பேட்டை உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலக வளாகத்தில், தொழிற்பேட்டை பிரிவுக்கான உதவி பொறியாளர் பிரிவு அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கண்ணன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன் பங்கேற்று, அலுவலகத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு, மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் தனித்தனியாக பிரிவு அலுவலகம் இருப்பது போல், தொழிற்பேட்டை பிரிவுக்காக உதவி பொறியாளர் அலுவலகம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. வேலைப்பளுவை பிரித்தளிக்கும் வகையிலும், பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும் அமையும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.கிருஷ்ணகிரி செயற்பொறியாளர்கள் ஜெகநாதன், பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர் சிதம்பரம், உதவி பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு