நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கன மழை
நாமக்கல்:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் பரவலாக மழை பதிவாகியுள்ளது. பகல் நேர வெப்பநிலை, 95 டிகிரி பாரன்ஹீட், இரவு நேர வெப்பம், 75 டிகிரி பாரன்ஹீட் அளவில் நிலவியது. இன்று முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு, அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 89.6 டிகிரி பாரன்ஹீட் முதல், 91.4 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 66.2 பாரன்ஹீட் முதல், 73.4 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். 5 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
காற்றின் ஈரப்பதம், 80 முதல், 100 சதவீதம் வரை இருக்கும். காற்று கிழக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து, மணிக்கு, 6 முதல் 8 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மாவட்டத்தில் இன்று, 34 மி.மீ., 18ல், 33 மி.மீ., 19ல், 37 மி.மீ., 20ல், 35 மி.மீ., 21ல், 37 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.