இயற்கை சூழலில் ஸ்ரீ ரமண விகாஸ் பள்ளி
நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நவீன கல்வியை, கற்பித்தலில் புகுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்களை கிராமப்புற மாணவர்களுக்கும் கொண்டு சென்று கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதே ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி என அக மகிழ்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்.
அவர்கள் கூறுகையில், எந்த குழந்தையும் எதற்காகவும் தவிக்கக்கூடாது என்பதற்காக, ஏற்றத்தாழ்வு இல்லாத பள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக குளிர்சாதன வசதி கொண்ட வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, தொலைக்காட்சி வழி ஆன்லைன் கல்வி, கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், தனி திறன் வளர்க்கும் கல்வி, நுாலக வசதி, கலை மற்றும் பன்பாட்டுப் பயிற்சி, ஒழுக்கம், அறிவு, திறமை வளர்க்கும் பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறோம்.
மாணவர்களிடம் அன்பும் அரவணைப்பும் காட்டி வழிநடத்தும் திறமையான ஆசிரியர்கள், காற்றோட்டமான மிகப்பெரிய வகுப்பறை்,விளையாட்டு திடல், உபகரணங்கள், பசுமையான மரங்கள் சூழ்ந்த இயற்கையான கல்விச் சூழலை அதிகப்படுத்தித் தருவது தனிசிறப்பு.
தனித்திறன் வளர்க்கும் யோகா, கராத்தே, சிலம்பம், பாட்டு, இசை, செஸ், கேரம், ஓவியம், நடனம், அபாகஸ், ஸ்கேட்டிங், ஒலியியல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி வாசிப்பு, எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி வழங்கப்படுகிறது. ரமணர் ஜெயந்தி விழா, சமத்துவப்பொங்கல் விழா, கிறிஸ்துமஸ் விழா, ரம்ஜான் பெருவிழா, மகளிர் தினவிழா, பாரம்பரிய உணவுத்திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் நுாற்றுக்கு நுாறு சதவீதத்தேர்ச்சியும், அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகின்றனர். ஏழை மாணவர்கள் கல்வியைத் தேடி வர முடியாவிட்டால் கல்வி தான் அவனைத்தேடிச் செல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கினை தாரக மந்திரமாகக் கொண்டு ஏற்றத்தாழ்வுகளைத் களைந்து அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் பள்ளியின் கொள்கை என்றனர்.
மேலும்
-
இளைஞர் காங்., தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
குடியிருப்புகள் அருகே சிறுத்தை கூண்டு வைக்க மக்கள் வலியுறுத்தல்
-
அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
-
உணவு உதவியை நிறுத்திய ஐ.நா.,; 7 லட்சம் பாலஸ்தீனியர் பட்டினி
-
த.வெ.க. வந்த வழி வேறு; காங்கிரஸ் போகும் வழி வேறு
-
கரப்பான் பூச்சியை அழிக்காமல் விட்டால் ஆபத்து!