திருச்செங்கோட்டில் 'சேவா சேது' முகாம்
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு கீழேரிபட்டி பகுதியில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்று, பிரதம மந்திரி சூரிய வீடு மற்றும் தமிழக அரசின் கூடுதல் மானியத்துடன் கூடிய சேவா சேது சூரிய மின் சக்தி தகடுகள் அமைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் தொடங்கி வைத்தார்.
வீட்டு மின் நுகர்வோர் சூரிய மின்சக்தி தகடுகள் அமைப்பது தொடர்பான் விபரங்களும், அதன் பயன் குறித்தும் விளக்கமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட சோலார் விற்பனை முகவர்களும், 100க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்களும் கலந்துகொண்டனர். ஐந்து மின் நுகர்வோர்களுக்கு சோலார் மேற்கூரை தகடுகள் அமைக்க விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 நுகர்வோர்களுக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் கணேசன், உதவிசெயற்பொறியாளர், உதவிபொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்
-
ஐப்பசி தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
-
இயற்கை விவசாயிகள் கட்டணமின்றி உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்