ஐப்பசி தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
ராசிபுரம்:ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில்களில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருத்தேர் விழா நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா, 20ல் தொடங்கி, நவ., 22 வரை ஒரு மாதம் நடக்கிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக, நேற்று காலை, முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் வரும், 20ல் நடக்கிறது. 22ல் கம்பம் நடும் விழாவும், நவ., 3ல் பூவோடு எடுத்தல் மற்றும் கொடியேற்றுதல் உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, நவ., 5ல் நடக்கிறது. அதை தொடர்ந்து நவ., 7ல் சப்தாபரணம், 8ல் வசந்த உற்சவமும் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்
-
திருச்செங்கோட்டில் 'சேவா சேது' முகாம்
-
இயற்கை விவசாயிகள் கட்டணமின்றி உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement