இயற்கை விவசாயிகள் கட்டணமின்றி உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை:

இயற்கை வேளாண் மூலம் விளை பொருட்களை உற்பத்தி செய்வோர், உயிர்ம முறையில் விவசாயம் செய்வதற்கான சான்று பெற, தமிழக அரசு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு மற்றும் மத்திய அரசின் அபீடா நிறுவனத்தின் அங்கீகாரம் அடிப்படையில் தனிநபராக, குழுவாக அல்லது நிறுவனம் பதிவு செய்து உயிர்ம வேளாண் சான்றை பெற்று பயன்பெறலாம்.

சான்றிதழ் பெற, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். புதிய சான்று பெறவும், ஏற்கனவே உள்ள சான்றை புதுப்பிக்கவும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பின், வயலாய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு செய்து, மூன்றாண்டுகள் நிறைவு செய்தபின்பே, பண்ணையானது இயற்கை வேளாண் நிலையை அடையும். உயிர்ம வேளாண் சான்று பெற, விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement