கரூர் வட்டாரத்தில் தொடர் மழை

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மழை பெய்தது.

வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்தழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதல், 6:30 மணி வரை கரூர் டவுன், திருமாநிலையூர், சுங்ககேட், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், காந்தி கிராமம், பசுபதி பாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. அப்போது, குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement