புகழிமலை கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி
கரூர்:புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், புரட்டாசி மாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைநடந்தது.
புகழிமலை,
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு, புரட்டாசி மாத
சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம்
உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன்
காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு
பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம்
சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை
சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், புரட்டாசி மாத
சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement