ஆயுத பூஜைக்காக கரூரில் 135 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கரூர்:ஆயுத பூஜைக்காக கரூரில் இருந்து நேற்று முதல், 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆயுத
பூஜையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழகம்
முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்ட தலை நகரங்களில் இருந்து சிறப்பு
பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
கரூர் திருமாநிலையூர் புதிய பஸ்
ஸ்டாண்டில் இருந்து, நேற்று முதல் வரும், 19 வரையிலும், 20 மற்றும், 21ல்,
பல் வேறு நகரங்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி
கரூரில் இருந்து கோவைக்கு, 85 பஸ்களும், திருப்பூருக்கு, 30
பஸ்களும், திருச்சிக்கு, 20 பஸ்கள் உள்பட, 135 பஸ்கள் இயக்கப்பட
உள்ளது.
பொதுமக்களின் தேவையறிந்து, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என, கரூர் மண்டல
போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement