சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கரூர்:கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட தலைமை நீதிபதி சுமதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி காளியப்பனுார், தான்தோன்றிமலை வழியாக கரூர் அரசு கலைக்கல்லுாரியை அடைந்தது. பேரணியில், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் அனுராதா, வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர்,
தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement