கிரானைட் வீரமணி வழக்கில் 3 வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.24 கோடி பறிமுதல்

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிறுமி ஒருவரின் தாய் அளித்த 2வது புகாரில், 2 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று 2வது நாளாக புழல் சிறையில் வைத்தே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருக்க, முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அவர் லஞ்சமாக கொடுத்திருந்தது தெரிய வந்தது. சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் 3 கிலோ தங்க நகைக்கட்டிகளையும் வாங்கிய வீரமணி, அதிகாரிகள், போலீசாருக்கு, பரிசாக கொடுத்திருப்பது அம்பலமானது.

இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் பிரகாஷின் வங்கிக் கணக்கிற்கு, வீரமணி பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் கோரிய பிரகாஷின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தற்போது, பிரகாஷின் 3 வங்கிக்கணக்குகளை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த கணக்கில் இருந்த ரூ.24 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement