தவெகவில் போதை மாபியா... ஊருக்கு மட்டும் உபதேசமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை; TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party, மத்திய அரசின் டிஆர்ஐ அதிகாரிகளால் நாகை மாவட்ட தவெக நிர்வாகியும், கீழ்வேளூர் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதல்வர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெட்வொர்க்கையும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதல்வர் இதற்கும் பஞ்ச் டயலாக் அடிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓ நம்மாளு எப்படி அங்கே இருக்கான்?
இந்த ஆளை பாராட்டியே தீரணும்ங்க. கோடிக்கணக்கான ஊழல்களை செஞ்சிட்டு அவை அத்தனையும் பிடிபடும் நிலையில் இருக்கும்போதும், மத்தியிலும் ஆதரவு இல்ல, மாநிலத்திலும் அதிகாரமில்லை ங்கற நிலைமையிலும், கொஞ்சம் கூட பயப்படாம, ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரா இருந்துகிட்டு அவ்வளவு பெரிய முதலமைச்சரை பார்த்து கேலி கிண்டல் செய்யும் துணிச்சல் யாருக்குங்க வரும்??
இதுக்கு துணிச்சல் எல்லாம் தேவையில்லைங்க ..... இவர் சொல்வதை நம்ப கோடிக்கணக்கான நபர்கள் இருக்காங்களே .... அது போதும் .....
அயலக அணி, குறிப்பா ஜாஃபர் சாதிக் மூலமா போதை மாபியாக்கள் சமூக சேவையா செஞ்சாங்க துக்ளக்காரே ??
அப்பாவுக்கு வயசாயிடுச்சி. அதனால் அவருடைய பொது பொருள் நண்பர்கள் சகவாசம் மறந்து வுட்டது அதுக்காக மற்றவரை நீ ஏசுவது எப்படி தகும். இன்னும் கொஞ்ச நாளில் தலையை பிய்த்துக்கொண்டு ஓடப்போகுறீரகள்
அந்த அயலக அணி ஆளு?.
வரவர நாட்டுல யாரெல்லாம் போதைப்பொருளைப் பற்றிப் பேசுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சு
ஜாபர் சாதிக், அமீர் போன்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கிட்டு, அவர்களிடமிருந்து கட்சிக்கு ஃபண்ட் வாங்கிக்கிட்டு, இன்னைக்கு ஏதோ தாங்கள் மட்டும்தான் யோக்கியர்கள் மாதிரி அடுத்தவங்களைக் கைநீட்டிப் பேசுறாங்க
கொஞ்சம்கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா இந்தத் திமுகக்காரங்களுக்கு? முக்கியமா, அவங்க தலைவருக்கு?
காரித் துப்பலாம் கன்றாவி… கொடுமை… காலக்கொடுமை
அப்பா நீயும் உன் குடும்ப கழகம் விதைச்சுதுதான் .இப்போ எப்படி பேசுற .அடுத்த தலைமுறையையே நாசம் பண்ணிட்டு நீங்க இப்போ உபதேசம் பண்ண வேண்டாம் .மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு