5 நாட்களுக்குப் பிறகு ஏறுமுகமாகிய தங்கம் விலை; இன்று ரூ.160 உயர்வு

சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை மாறுபட்டு வருகிறது. இந்த அக்டோபர் மாதம் துவங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு முந்தைய 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,929 குறைந்துள்ளது. இனியும் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 1,08,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ரூ.15,535க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, வார இறுதியில் திடீரென உயர்ந்திருப்பது ஆபரண பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ரூ.240க்கும், கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

Advertisement