திமுக ஆட்சியில் போடப்பட்ட மேலும் ஒரு டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முந்தைய திமுக அரசால் போடப்பட்ட சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையை உயர்த்தி நிர்ணயித்தது, முறைகேடு நடந்தது போன்ற காரணங்களால் டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகரில் நடைபாதை அமைப்பதற்காக விடப்பட்ட ரூ.284 கோடி டெண்டரை பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, 7 மாவட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்காக, சாலையோர வசதி மையங்களை அமைக்க, திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தனியார் பங்களிப்புடன் அமைக்க மாநில நெடுஞ்சாலை ஆணையம் போட்ட இந்த டெண்டரை, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Advertisement