ராஜஸ்தானில் டிராவலர் பள்ளத்தில் விழுந்ததில் 8 பேர் பலி

ராஜஸ்தானில் டிராவலர் பள்ளத்தில் விழுந்ததில் 8 பேர் பலி

கோட்டா: மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து ராஜஸ்தானின் காத்து ஷியாம் நோக்கி 27 பேருடன் டிராவலர் வாகனம் வந்து கொண்டிருந்தது. டில்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், கோட்டா பகுதிக்கு வந்தபோது, அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 5 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸூக்கு தகவல் அளிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தை தொடந்து, மாவட்ட கலெக்டர் பியூஷ் சமாரியா மற்றும் ஐஜி ஹரேந்திர மாகாவர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

எச்சரிக்கை

நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement