இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி தோல்வி; பியூஷ் கோயல்
மும்பை: மும்பையில் நடந்த துர்கா பூஜையில் சக்தி ஸ்வரூபா மா ஜெகதாம்பா சுவாமி வழிபாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது, மெகா தீபாரானை செய்து அம்மனை வழிபட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது; இந்தியாவின் வரலாறு, பாரம்பரிய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக, நாடு முழுதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களும், இளம்பெண்களும் தாண்டியா, கர்பா போன்ற பாரம்பரிய நடனமாடியதை பார்த்திருப்பீர்கள். இதுதான் இந்திய இளைஞர்களின் உண்மையான முகம். இவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்.
இளைஞர்களைத் திசைதிருப்பும் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களின் முயற்சி முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. இளைஞர்களின் கைகளில் இந்தியா உள்ளது. 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி உறுதியாக நகரும், இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நீர்நிலை ஓரங்களில் பனை விதை நடவு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
சமஸ்கிருத வகுப்பில் இலவசமாக சேரலாம்
-
இடமிருந்தும் இருக்கை இல்லை விசிறி இருந்தும் காற்று இல்லை: சோழவந்தான் பதிவு அலுவலக அவலம்
-
பாரா ஆசிய விளையாட்டு: முதல் நாளில் இந்தியா பதக்க மழை
-
நியூசிலாந்து முதலீட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்: பியூஷ் கோயல்
-
உணவு பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செ ல்வதில் அலட்சியம்: எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை