புரட்டாசி கடைசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஒட்டன்சத்திரம்: புரட்டாசி கடைசி சனிக்கிழமை யை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காளாஞ்சிபட்டி ரங்கநாத சுவாமி கோயிலில் அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. புதிய ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரங்கநாதர் பஜனை பாடல்கள் பாடப்பட்டு திருக்கம்பத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் ரங்கநாதர் மலையை சுற்றி ஊர்வலமாக வந்தார்.
பருமரத்துப்பட்டி வெங்கடேச பெருமாள், பத்மாவதி, மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement