கடலுார் கடற்கரைக்கு வந்த 'ஹோவர் கிராப்ட்' கப்பல்கள்
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சிற்கு வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ''ஹோவர் கிராப்ட்' கப்பல்களை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 அதிநவீன 'ேஹாவர் கிராப்ட்' படகுகள் காரைக்காலில் இருந்து கடலுார் சில்வர் பீச்சிற்கு காலை வந்து சேர்ந்தன. கடலில் இருந்து பலத்த காற்று மற்றும் சத்தத்துடன் கடல் பரப்பில் இருந்து கடற்கரை மணலில் சீறிப்பாய்ந்து, நிலப்பகுதியில் பயணித்து நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கப்பல் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கிக் கூறினர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்னை வழியாக பயணித்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா துறைமுகம் ஹால்டியா நோக்கி புறப்பட்டது.
கோவாவில் தயாரிக்கப்பட்ட 'ஹோவர் கிராப்ட்' படகுகள் அங்கிருந்து புறப்பட்டு ஹால்டியா துறைமுகம் நோக்கிச் செல்கின்றன. ஹால்டியாவுக்குச் செல்லும் வழியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட கடற்கரை வழியாக பயணித்துச் செல்கின்றன. அந்த வகையில் கடலுார் சில்வர் பீச்சிற்கு கப்பல்கள் வந்தன.
இந்த கப்பல் அதிக ஆழம் இல்லாத கடல் பகுதிகளிலும், தரைப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி அதிவேகமாகச் செல்லும் திறன் கொண்டவை. கடற்கரை பகுதிகளில் கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களை கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு