பெருமாள் கோயில் பெரும்பூஜை விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பெரும் பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. பின் பெரும்பூஜை சிறப்பாக கோயில் முன் உள்ள கொடிமரத்திற்கு தயார் செய்து வைக்கப்பட்ட உணவு வகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

வரதராஜ பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பீனிக்ஸ் பறவை நண்பர்கள் சார்பில் நாடகம் நடந்தது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

Advertisement