மின்கட்டமைப்பு செயலிழப்பு எதிரொலி; இருளில் மூழ்கியது இலங்கை

கொழும்பு: இலங்கையில் மின் பரிமாற்றம் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.41 மணி அளவில் இலங்கை முழுவதும் மின்விநியோகம் திடீரென நின்று போனது. மின் தடைக்கான காரணம் என்று தெரியாமல் மக்கள் குழம்பித் தவித்தனர். மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத சூழல் எழுந்தது.

எரிசக்தித்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்கா கூறுகையில், " மேல் கொத்மலை பகுதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் மின் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வேறு ஏதேனும் காரணிகள் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

மின்தடையால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே தண்ணீரை வீணாக்க வேண்டாம், சோலார் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை தற்காலிகமாக துண்டித்துவிட வேண்டும் என்று என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement