திருக்கோவிலுார் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், இணைச் செயலாளர் சத்யநாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பேசினர்.

தொடர்ந்து கல்லுாரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரியா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.

Advertisement