பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: கமிஷனர் ஆய்வு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கும் சூழலில், பருவமழை தீவிரமடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார் நகராட்சியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான மரம் அறுக்கும் இயந்திரம், ஜே.சி.பி., ஜெனரேட்டர், தண்ணீர் இருக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டு கமிஷனர் திவ்யா ஆய்வு செய்தார்.
நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 04153 - 294305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு