மதுபாட்டில் திருட்டை தடுக்க லாரிகளில் சி.சி.டி.வி.,

திருப்புவனம்: மதுபாட்டில் ஏற்றி வரும் சரக்கு லாரிகளில் பாட்டில்கள் திருட்டை தடுக்க சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டது.

மதுரை வடக்கு பகுதியில் உள்ள 123 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுபாட்டில் விநியோகம் செய்ய சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கழுகேர்கடை விலக்கில் கோடவுன் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு மது ஆலைகளில் இருந்து கழுகேர்கடை கோடவுனுக்கு அதிகளவில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் லாரிகளில் மதுபாட்டில்கள் திருடு போகாமல் கண்காணிக்க சி.சி.டி.வி., பொருத்தப்பட்டுள்ளது. 50 சதவீத லாரிகளில் டிரைவர் கேபினுக்கு மேல் பகுதியில் சி.சி.டி.வி., பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் அனைத்து லாரிகளிலும் கேமரா பொருத்தப்பட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement