பூஜை பொருட்கள் வாங்க நகரில் திரண்ட மக்கள்

உடுமலை: சரஸ்வதி, ஆயுத பூஜை வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க, மக்கள் உடுமலை நகரில் திரண்டனர். வாழைக்கன்று, பூக்கள், இதர பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியிருந்தது.

உடுமலை பகுதியில், நுாற்பாலை, பின்னலாடை, தென்னை நார் தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவு இயங்கி வருகின்றன. தொழில்கள் சிறக்க, சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க, உடுமலை நகரில் நேற்று மக்கள் திரண்டனர்.

பூவன் ரக வாழை கிலோ ரூ.80; செவ்வாழை, 100; வாழைக்கன்று ஜோடி 50 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும், அலுவலங்களை அலங்கரிக்கும் காகித தோரணங்கள், 150 ரூபாய் வரையிலும், பொரி ஒரு பாக்கெட் 20 ரூபாய்; நிலக்கடலை கிலோ 240; அவல் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று காலை முதலே, பல்லடம், தாராபுரம், பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட ரோடுகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Advertisement