அ.தி.மு.க., ஆண்டுவிழா கட்சியினர் கொண்டாட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., சார்பில், கட்சியின், 55ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திப்பம்பட்டி கிளை கழகத்தின் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* வால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், நகர கழக துணை செயலாளர் பொன்கணேஷ் தலைமையில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விழாவில், மாவட்ட ஏ.டி.பி., தொழிற்சங்க இணைசெயலாளர் சண்முகவேலு, ஐ.டி.விங்., செயலாளர் சண்முகம், நகர இளைஞரணி செயலாளர் சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பெண்ணிடம் ரூ.1.65 லட்சம் மோசடி
-
வைகை அணையில் பராமரிப்பு இல்லாத ரவுண்டானா பூங்கா
-
சென்னையில் 30 செ.மீ., தாண்டியும் மழை பெய்தால் என்ன செய்யமுடியும்; அமைச்சர் விக்னேஷ்
-
சிதிலமடைந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
-
க. புதுப்பட்டியில் ஊத்துக்காடு பாலம் சேதம்: பள்ளி வானங்கள் சிரமம்
-
கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்