பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பழமை வாய்ந்த காட்டு இலவ மரம் வேரோடு சாய்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே, தேவம்பாடி காளிபாளையத்தில், நல்லிக்கவுண்டன்பாளையம் செல்லும் ரோட்டில், பழமை வாய்ந்த காட்டு இலவ மரம் ஒன்று இருந்தது. இந்த மரம், ஊரின் அடையாளமாக கருதப்பட்டது.

பழமையான இந்த மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்தது. அப்போது மக்கள் யாரும் செல்லாததால், விபத்துகள் தவிர்க்கப்பட்டது.

மக்கள் கூறுகையில், ‘தேவம்பாடி காளிபாளையம் எல்லையில் காவலனாய், நுாற்றாண்டுகளை கடந்து முகப்பு சின்னமாய் இந்த மரம் இருந்தது. மரத்தின் கம்பீரமும், ஊரின் நினைவுச்சின்னமும் மறக்க முடியாதது,’ என்றனர்.

Advertisement