பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
சூலூர்: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
புரட்டாசி மாத ஐந்தாவது சனிக் கிழமையை ஒட்டி, சூலூர் வேங்கடநாத பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில், கணியூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கலங்கல், அப்பநாயக்கன் பட்டி, செலக்கரச்சல், கள்ளப்பாளையம் பூமி நீளா சமேத சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் காங்கயம்பாளையம், செங்கத்துறை வெங்கடேச பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடி பெருமானை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா
Advertisement
Advertisement