த.வெ.க., பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மாத்திமேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 46. த.வெ.க., தென்கிழக்கு ஒன்றிய இணை செயலர். நேற்று இரவு பைக்கில் வீட்டுக்கு சென்ற போது, மற்றொரு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ஸ்ரீதேவியை வழிமறித்து, அரிவாளால் அவரது கை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர். ஸ்ரீதேவி பைக்கை போட்டுவிட்டு, தப்பி ஓடி அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்தவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பினர்.
ஸ்ரீதேவியை, அங்கிருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்கத்தா பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
-
மழையால் போட்டி பாதியில் ரத்து: 'டி-20' தொடர் சமன்
-
வழிகாட்டி மதிப்பு ஆட்சேபனை இணைய வழி வசதி தேவை
-
மேற்கு வங்கத்தில் சோகம்; துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
Advertisement
Advertisement