மாநில தடகளம் 206 பேர் பங்கேற்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட தடகள போட்டி எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடந்தது. குறுமைய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற, 1,361 பேர் பங்கேற்றனர். 26 வகையான தடகள போட்டிகளின் நிறைவில், மாணவர் பிரிவில், தெற்கு குறுமைய அணியும், மாணவியர் பிரிவில் அவிநாசி குறுமைய அணியும் முதலிடம் பெற்றது.
திருப்பூர் மாவட்ட தடகள போட்டிகள் வீரர் மற்றும் வீராங்கனையர் பிரிவில், தலா, 103 பேர் வீதம், 206 பேர் மாநில தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். பள்ளி மாணவருக்கான மாநில தடகள போட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்கலை கழக தடகள மைதானத்தில் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் கூறுகையில், ‘தனிநபர், குழு போட்டிகளில் நிச்சயம் திருப்பூர் மாவட்ட குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக களமிறங்கிய 'லால் ஹிட்'
-
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
-
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
-
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு
-
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
Advertisement
Advertisement