பாரா ஆசிய விளையாட்டு: 11 பதக்கங்களை குவித்தது இந்திய அணி
பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளில், 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்று இந்தியா சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தது.
ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடந்து வரும் இப்போட்டியில், தடகளம் மற்றும் துப்பாக்கி சுடுதலில் இந்திய நட்சத்திரங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி-47 பிரிவில் நிஷாத் குமார்; ஈட்டி எறிதல் எப்-46 பிரிவில் ரிங்கு; பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் டி-12/13 பிரிவில் சவுமியா; 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்.-1 பிரிவில் மோனா அகர்வால் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை கைப்பற்றினர். இதில், ஈட்டி எறிதல் பிரிவில் ரிங்கு தனது கடைசி வாய்ப்பில் 65.11 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
5 வெள்ளி; 2 வெண்கலம்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்-1 பிரிவில் அவனி லெகாரா; 1500 மீட்டர் ஓட்டத்தில் டி-12/13 பிரிவில் ராதா வெங்கடேஷ்; ஜூடோ ஜே2 - 52 கிலோ பிரிவில் கோகிலா; ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் அஜீத் சிங்; 100 மீட்டர் பிரீஸ்டைல் எஸ்-13 பிரிவில் ரவி கார்த்திக் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர். மேலும், கபில் பர்மார், ரவன்னி வலசனாயினி ஆகியோர் வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே, நீச்சல் போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் எஸ்-10 பிரிவு இறுதிப் போட்டியில் கபில் குமார் 59.69 வினாடிகளில் நீந்தி நான்காவது இடத்தையும், அஜய் போசலே ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும்
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
-
தரமற்ற மருந்து, மாத்திரைகள் தமிழகம், கர்நாடகாவில் அதிகம்