ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள்

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை, டாக்டர் செந்தில்குமரன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்து, நரம்பியல், மாரடைப்பு, குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவுகளில் உயர்தரச் சேவையாற்றி வருகிறது. கேத் லேப், 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ, 32 ஸ்லைஸ் சிடி போன்ற அதிநவீன வசதிகள் இங்குண்டு. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2,500-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், 1,000 ஆஞ்சியோபிளாஸ்டி, 60 பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவில் ஆண்டுக்கு 20,000 நோயாளிகள் காப்பாற்றப்படுவதுடன், பக்கவாதச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள், 30,000 டயாலிசிஸ் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். எப்.ஓ.ஜி.எஸ்.ஐ. அங்கீகாரம் பெற்ற இம்மையத்தில், 'யுஏஇ' கருப்பைக் கட்டி சிகிச்சையும், அடையாறு நிறுவனப் பயிற்சி பெற்ற நிபுணர்களின் புற்றுநோய் பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன. அவசர உதவிக்கு 97500 00108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

Advertisement