வரி விலக்கு வழங்கியதற்கு வர்த்தக ஒப்பந்தமும் காரணம்: சொல்கிறார் அமெரிக்க அமைச்சர்
புதுடில்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு இந்தியாவுடன் விரைவில் கையெழுத்தாகவுள்ள வர்த்தக ஒப்பந்தமும் முக்கிய காரணம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளை மும்பை வரவுள்ள அவர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் செல்கிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 முக்கிய நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் நிறுத்திவைத்தார்.
இதுகுறித்து ரூபியோ கூறுகையில், ''இந்தியா எங்களின் முக்கிய கூட்டாளி. எரிசக்தி தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. உக்ரைன் போர் மற்றும் சவுதி மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால், சர்வதேச எரிபொருள் வினியோகம் மற்றும் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை ஆய்வு செய்ய அதிபர் டிரம்ப் 60 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த முயற்சியும், இந்த வரி விலக்கு முடிவில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டது,'' என்றார்.
அமெரிக்கா வின் நம்பக்காதன்மை மிகவும் குறைந்து விட்டது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது அங்கு விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டு இருக்கிறது நிலைமை இப்படியே போனால் ட்ரம்பின் கட்சி தேறாது அதனால் ரஷ்யாவில் டீசல் வாங்கி சமாளிக்கலாம் என்று இருக்கிறார்கள் அதனால் தேர்தல் முடியும் வரை 60 நாட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளர்ந்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். தேர்தல் முடிந்தால் மீண்டும் பழையபடி கட்டுப்பாடுகளை விதிப்பார் மீண்டும் வரியை கொண்டு வருவார். வரி ஒப்பந்தம் அவ்வளவு சாதாரணமாக முடிவுக்கு வரும் என்று சொல்லிவிட முடியாது, இந்த அமெரிக்க அமைச்சர் இந்திய மண்ணில் இருக்கும் வரை ஒரு விதமாக பேசுவார் அமெரிக்க மண்ணிற்கு திரும்பி செல்லும் போது அங்கு வேறு விதமாக பேசுவார். சுருக்கமா சொல்லணும் என்றால் அமெரிக்காவில் நடக்க இருக்கும் தேர்தலுக்கான பம்மாத்து வேலை மட்டுமே.
அம்பானி டெக்சாஸ் மாநிலத்தில் 300 பில்லியன் டாலர் முதலீட்டில் எண்ணெய் சுத்தீகரிப்பு தொழிற்சாலை துவங்க ஆர்வமாக யிருக்கிறார். தனியார் முதலீடு. எஸ்ஸார் குழுமத்தின் இரும்பு உருக்கு அலைக்கும் அமெரிக்காவில் திறக்க மும்முரம். ஏற்கனவே டாக்டர் ரெட்டி போன்ற பார்மா கம்பெனி அமெரிக்காவில் உற்பத்தி செய்கிறார்கள் சன் டிவி அங்கே சேனல் துவங்கினாலும் ஆச்சர்யமில்லைமேலும்
-
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம்(Tag) சாலையோர வியாபாரிகளுக்கு 7 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்
-
சென்னையில் 4 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பாலம்; டெண்டர் கோரியது தமிழக அரசு
-
மின் கம்பத்தை சூழ்ந்த புதர் மழை காலத்தில் ஆபத்து
-
சேதமடைந்து வரும் சாலை சிரமத்தில் கிராம மக்கள்
-
ஊர் பெயர் தெரியவில்லை சிரமப்படும் பயணிகள்
-
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; மண் சரிவால் ரயில் சேவை பாதிப்பு