மாணவிக்கு கத்திக்குத்து 17 வயது காதலனுக்கு வலை

திருப்பூர்: திருப்பூர் அருகே, கல்லுாரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவனை வேலம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர், சாமுண்டி புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், தாராபுரம் ரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே கல்லுாரியில் படித்து வரும் நிலையில், சிறுமி வேறு ஒருவருடன் இன்ஸ்டா கிராமில் பேசுவதாகச் சந்தேகமடைந்த சிறுவன், அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் இரு வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிறுமி அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திர மடைந்த சிறுவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியைக் குத்திவிட்டு தப்பியோடினார். காயமடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வேலம் பாளையம் போலீசார் விசாரித்து, தப்பியோடிய சிறு வனைத் தேடி வருகின்றனர்.

Advertisement