பெண் போலீஸ் வீட்டில் பைக் திருடிய இருவர் கைது

1

பாலக்காடு: கேரள மாநிலம், வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீடு புதுக்கோடு மணப்பாடத்தில் உள்ளது. கடந்த ஜூலை 18ம் தேதி இரவு, வீட்டிலிருந்த அவரது பைக் திருடு போனது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பைக் தமிழகத்தில், சத்தியமங்கலம் பகுதியில் மீட்கப்பட்டது. அந்த பைக்கை வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த மாதேஷ், 43, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, மணப்பாடத்தை சேர்ந்த ஷிஜு, 40, பைக்கை திருடி தன்னிடம் விற்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷிஜுவை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஷிஜு மற்றும் மாதேஷ் ஆகிய இருவர் மீதும், ஏற்கனவே பல்வேறு கஞ்சா கடத்தல் மற்றும் வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, வடக்கஞ்சேரி போலீசார் தெரிவித்தனர்.

Advertisement