தனியார் பஸ் மோதி விபத்து ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி

பாலக்காடு: பாலக்காடு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் பர்த்தலோமியா ஜோசப், 65. இவரது மனைவி ஹனி, 51.

நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, பி.எம்.ஜி. மேல்நிலை பள்ளி பகுதியிலிருந்து ஒலவக்கோடு நோக்கி சென்ற தனியார் பஸ், அதே மார்க்கமாக முன்னால் சென்ற ஸ்கூட்டரின் பின்பக்கம் மோதியது.

மோதிய வேகத்தில் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து இருந்த ஹனி துாக்கி வீசப்பட்டு, பஸ்சின் முன்பகுதியில் விழுந்தார்.

பஸ்சின் முன்சக்கரம் அவரது கால்கள் மீது ஏறியது. படுகாயமடைந்த அவரை பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஸ்கூட்டரை ஓட்டி சென்ற பர்த்தலோமியா ஜோசப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement