குளித்தலையில் சூரிய ஒளி மின்சாரம் குறித்து கருத்தரங்கம்
குளித்தலை:குளித்தலையில், கரூர் மின் பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டம் சார்பில் சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட தலைமை பொறியாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பரிமளா, குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், ஆர்.இ.சி. நோடல் ஆபீஸர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு, மாநில அரசு வழங்கும் நிதி உதவி, மானியம் குறித்து கருத்தரங்கில் கூறப்பட்டது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் பொதுமக்கள், மின்சார வாரியம் தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சூரிய ஒளி மின்சாரம் அமைத்து அனைவரும் பயன்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
Advertisement
Advertisement