செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
செஞ்சி: செஞ்சி அருகே காணாமல் போன சிறுமி மற்றும் பெண்ணை மூன்று மணி நேரத்தில் போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த என்.ஆர். பேட்டை கிராமத்தில், ஒரே தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 19 வயது பெண் ஆகிய இருவரும் தங்களது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.
அவர்களது பெற்றோர் இன்று காலை 11:00 மணியளவில் செஞ்சி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் உடனடியாக இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் மற்றும் மொபைல்போன் எண் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் வேலுார் மார்க்கமாக பஸ்சில் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வேலுார் சென்ற போது பஸ் நிலையத்தில் சிறுமியும் பெண்னும் செய்வதறியாது நின்றுகொண்டிருந்ததை பார்த்தனர்.
அவர்களை மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
புகார் கொடுத்த மூன்று மணி நேரத்தில் இருவரையும் கண்டுபிடித்த செஞ்சி போலீசாருக்கு மாவட்ட எஸ்பி மதிவாணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்