ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் காரை திருடிய வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி இன்ப சரஸ்வதி,55; தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர், கடந்த ஆக., 25ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டிற்குள் நுழைந்து, 30 சவரன் நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்களையும், வாசலில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின்பேரில் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement