பருவமழையால் ஏற்படும் பாதிப்பு: தொலைபேசியில் புகார் அளிக்கலாம்

கரூர்,:வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்பு, வெள்ள சேதம் குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கனமழை காலங்களில் இடி மின்னல் ஏற்படும்போது, பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆறு, காட்டாறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்க்கவும். குழந்தைகளை நீர் நிலைகளில் குளிப்பதையும், இறங்குவதையும் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், வெள்ள சேதம் குறித்த புகார்களை 1077, 04324-2 56306 ஆகிய எண்களில், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement