வாலிபர் மர்ம மரணம்
கோவை: சாய்பாபாகாலனி, சிவக்குமார் வீதியில் உள்ள பூங்காவில் ஒருவர் துாக்கில் தொங்குவதாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் இவர் பெயர் தேவிசங்கர், 48 என்பதும், அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வாரந்தோறும் வந்து செல்வதும் தெரியவந்தது.
அதிக குடிப்பழக்கம் காரணமாக, மனைவியை கடந்த பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர், நேற்று முன்தினம் அக்கா வீட்டிலும், குடித்துவிட்டு வரவேண்டாம் என கண்டித்துள்ளனர்; இதனால் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்; பிரேத பரிசோதனையின் முடிவில் காரணம் தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement