மகள் மாயம்: தாய் புகார்

குளித்தலை:குளித்தலை, புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆராயி, 45; காலனி தைக்கும் தொழிலாளி.

இவரது மகள் பரமேஸ்வரி, 19. இவரை, நாமக்கல் மாவட்டம், சங்கிலிபட்டியை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு, கடந்தாண்டு திருமணம் செய்து வைத்தனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடால், கடந்த, 6ல் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி, பரமேஸ்வரி சென்றார். மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, கணவர் சிவசங்கர் வீட்டுக்கு சென்றபோது, பரமேஸ்வரி அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆராயி அளித்த புகார்படி, குளித்தலை போலீசார், மாயமான பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.

Advertisement